சரக்கு விற்ற வாலிபர் கைது

எருமப்பட்டி:எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், மது பாட்டில்களை அதிகளவில் வாங்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, எருமப்பட்டி, அலங்காநத்தம், பாலப்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாகம்மாள் கோவில் அருகில், டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணகுமார், 33, என்பவரை போலீசார் கைது செய்து, 14 பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.* திருச்செங்கோடு ரூரல் போலீசார், மோளியபள்ளி பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாடார் தெருவில் வசிக்கும் பாப்பா, 52, பெண் வீட்டில் சோதனையிட்டனர். அதில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement