ரயில்வே பாலம் மேற்கூரை பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ஈரோடு,:ஈரோடு மாநகராட்சி, 60வது வார்டு வெண்டிபாளையம்
புதிய ரயில்வே நுழைவு பாலம் வழியாக, தினந்தோறும் ஏராளமான வாகனங்கள்
சென்று வருகின்றன.
மழை காலங்களில் பாலத்திற்குள் தண்ணீர் தேங்கி
விடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் மழைநீர்
தடுப்பு நடவடிக்கையாக, பாலத்தின் இருபுறமும் மேற்கூரை அமைக்கும்
பணிகள் துவங்கின.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த
பணிகள், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு
பகுதியில் மட்டும் மேற்கூரை அமைக்கப்பட்ட நிலையில், மறுபகுதி
பில்லர்களுடன் காட்சியளிக்கிறது. மழை காலத்தில் மீண்டும்
பாலத்திற்குள் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதால், சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
Advertisement
Advertisement