மின்சாரமின்றி தவிக்கும் மலைகிராம மக்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தல்
ஈரோடு:சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூர் உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் சீரான மின்சாரம் இன்றி, மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுபற்றி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முனுசாமி கூறியதாவது:
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள திங்களூர்,
குத்தியாலத்துார், கடம்பூர், கரளையம் உட்பட 100க்கும் மேற்பட்ட
சிறிய, பெரிய கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் முழு அளவில்
மின்சாரம் இல்லாத நிலையில், கடம்பூர் உட்பட சில பகுதிக்கு மின்சார
வசதி செய்யப்பட்டு, அதிக எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்கி உள்ளனர்.
இதனால் சீரான மின்சாரம் கிடைக்காமல், குறைந்த தாழ்வழுத்த மின்சாரமே
கிடைப்பதால், மின் சாதனங்கள், மோட்டார் போன்றவைபழுதாகிறது.
இதை
சீரமைக்க பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டோம். இதுபற்றி,
கலெக்டர் கந்தசாமி கூறுகையில், 'மலைப்பகுதிக்கு சீரான மின்சாரம்
வழங்க டிரான்ஸ்பார்ம் அமைக்க டெண்டர் கோரப்பட்டது. ஒரு நிறுவனமும்
டெண்டரை எடுக்காததால், நிறுவ முடியவில்லை. மின்வாரியமே, அதனை
அமைத்துத்தர அதிகாரிகளிடம் பேசுகிறேன்,' என்கிறார். பல மாதங்களாக
இப்பிரச்னை உள்ளதால், மலைவாழ் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுபற்றி மின்வாரியம் நேரடி கவனம் செலுத்தி, விரைவாக
டிரான்ஸ்பார்ம் அமைத்து, சீரான தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்