ஆமை வேகத்தில் வடிகால் பாலம் பணி சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
கரூர்:கரூர்
சின்ன ஆண்டாங்கோவில் சாலையிலிருந்து அண்ணா நகர் பிரிவு சாலையில்,
மழைநீர் வடிகால் பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
கரூர்
சின்ன ஆண்டாங்கோவில் சாலை, அண்ணாநகர் பகுதியை இணைக்கும் முக்கிய
பிரிவு சாலையில், தற்போது மழைநீர் வடிகால் பாலம் அமைக்கும் பணி
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடக்கிறது. இப்பகுதியானது
அண்ணாநகர் வழியாக, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும்
முக்கிய இணைப்பு பாதையாக விளங்குகிறது. இப்பாலத்தில் கட்டுமான
பணிகள் மந்தகதியில் நடக்கிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து
தடைபட்டுள்ளதால், வாகனங்கள் நீண்ட துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் மாற்றுப்பாதைகளில்
செல்வதால், குறுகலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது. இதன் காரணமாக, அடிக்கடி சிறு விபத்து ஏற்பட்டு வாகன
ஓட்டிகளும் பொதுமக்களும் காயமடையும் சூழல் நிலவுகிறது.
பொதுமக்களின்
சிரமங்களையும், தொடரும் விபத்துகளையும் கருத்தில் கொண்டு, கரூர்
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தொய்வடைந்து கிடக்கும்
வடிகால் பால கட்டுமான பணிகளைப் விரைந்து முடித்து, போக்குவரத்தை சீர்
செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி