குழாய் உடைந்து சேதம்: வீணாகி வரும் குடிநீர்

கிருஷ்ணராயபுரம்:போத்துராவூத்தான்பட்டி நெடுஞ்சாலை அருகில், குழாய் உடைந்து குடிநீர் தினமும் வீணாகி வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த போத்துராவூத்தான்பட்டி பஞ்சாயத்து, பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை வழியாக, காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் கொசூர் வரை செல்கிறது. இந்த குழாய் வழியாக செல்லும் காவிரி நீரை, கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, போத்துராவூத்தான்பட்டி பஞ்., அலுவலகம் செல்லும் நெடுஞ்சாலையில், மழைநீர் சேகரிப்பு குளம் அருகே, மண் சாலை வழியாக செல்லும் குழாய் உடைந்து காவிரி நீர் தினமும் வீணாகி, சாலையோர இடங்களில் உள்ள குட்டைகளுக்கு சென்று வீணாகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்லும் காவிரி நீரை, குறைவாகவே வினியோகம் செய்ய முடிகிறது.
எனவே, சேதமடைந்து குழாயை சரி செய்து, குடிநீர் வீணாகாமல் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement