தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
- நமது சிறப்பு நிருபர் -
தமிழகம் முழுவதும் நுாலகங்களில் உள்ள அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலி புத்தகங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் வைக்கப்பட்ட போலி எழுத்தாளர்களின், 1,510 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. அதில், அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து, 2.13 லட்சம் மதிப்பில், 40க்கும் மேற்பட்ட தலைப்புகளில், 1,024 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து, 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 46 தலைப்புகளில், 486 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட நுாலகம், பிற நுாலகங்களுக்கு அனுப்பப்பட்ட நுால்களை ஆய்வு செய்ததில், போலி எழுத்தாளர்களின், 200 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், 122 நுாலகங்களில், பீனிக்ஸ் பதிப்பகத்தின், 779 நுால்கள், அகல் விளக்கு பதிப்பகத்தில், 914 நுால்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பீனிக்ஸ் பதிப்பகத்திடம், 2024--25ம் ஆண்டில் 620 புத்தகங்கள், 2025--26ம் ஆண்டில் 328 புத்தகங்கள் என மொத்தம், 948 புத்தகங்கள், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.
அகல்விளக்கு பதிப்பகத்திடம், 2025-26ம் ஆண்டில் 711 புத்தகங்கள், 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, 91 நுாலகங்களில் இருந்தும் திரும்ப பெற்று சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 998 நுால்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 530 நுால்கள் கைப்பற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. சேலம் உட்பட மேலும் பல மாவட்டங்களிலும், இந்த இரண்டு பதிப்பகங்களின் நுால்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதிலிருந்து மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்பதை விடுத்து எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று தாமதம் இன்றி சிந்தித்தது மட்டுமின்றி செயல்படுத்தியும் உள்ளார்கள். இது நவீன விஞ்ஞான ஊழல். ஊழலுக்கு காட்டும் அக்கறையில் 10% ஆவது கல்விக்கு காட்டி இருந்தால் தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கும்?? எவ்வளவு மக்கள் பயன் அடைந்து இருப்பார்கள்?? ஊழலற்ற இந்தியா மாறியது போல், ஊழலற்ற தமிழகமும் சாத்தியம் தான்.
போலி நூல்களை அப்புறப்படுத்துவது இருக்கட்டும். அதை வாங்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? தப்பு செய்தால் விடமாட்டோம் என்று முதல்வர் விஜய் கூறியதற்கு என்ன அர்த்தம்? இந்த நூல்களுக்குரிய பணத்தை அதை வாங்குவதற்கு பரிந்துரை செய்தவர்களிடமிருந்து வசூலித்துவிட்டு அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். வெறுமனே நூல்களை நீக்கி மக்கள் பணத்தை திட்டமிட்டு கொல்லியடித்தவர்களை சும்மா விடுவதா? கடும் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
புத்தகத்திற்க்காக கொடுத்த பணம் கோவிந்தாவா ..... மணல் கொள்ளை, மின்சார கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை , மருந்து கொள்ளை, கல்விதுறை கொள்ளை, புதிதாக புத்தக கொள்ளை...மேலும்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி
-
தூய்மையான நகரங்கள் பட்டியல்; விருதை வென்ற தமிழக நகரம் எது தெரியுமா?
-
சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்