ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது.
திருமங்கலம்: தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டி லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் நவ.,3ல் ஏலக்காய் மூடைகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து ஏலக்காய் மூடைகள் சேதமடைந்ததாக வாலாந்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இந்நிலையில் செக்கானுாரணி போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக வந்த பாலகிருஷ்ணன் நவ.,14ல் கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் முத்து, போலீசார் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்டோர் செக்கானுாரணி போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாலகிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும்
-
மெக்சிகோவில் வன்முறை 11 பேர் பலி
-
நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்தாண்டு துவக்கம்! குஜராத்தின் சூரத் - வாபி இடையே இயக்க முடிவு
-
ஜி.ஹெச்.,ல் செவிலியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
-
தர்மபுரி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்
-
அரூரிலிருந்து தி.மலைக்கு 118 போலீசார் பயணம்