கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் டூவீலர் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிகளையொட்டி அமைந்துள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு ஒரு நாளைக்கு, 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள், 50க்கும் மேற்பட்ட கடைகளை அமைத்துள்ளனர்.ஆனால் தர்மபுரி, சேலம் பஸ்கள் நிற்கும் இடம், பஸ்கள் வெளியேறும் இடம் என, பஸ் ஸ்டாண்டின் பல
பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்களை வாரக்கணக்கில் நிறுத்தி விட்டு, வாகன ஓட்டிகள் வெளியூர் சென்று விடுகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள், வியாபாரிகள் தினமும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்களை நிறுத்துவோர் மீது, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisement