திருவண்ணாமலை தீபத்திருவிழா தரிசனத்தில் முதல்முறை; 3 ஆயிரம் பக்தர்களுக்கு இணைய வழி பாஸ்

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லா தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: 1,500 அனுமதி சீட்டுகள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும், 1500 சீட்டுகள் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கிரிவலப்பாதைகளில் பக்தர்கள் எவ்வித சிரமங்கள் இல்லாத வகையில் கிரிவலம் வருவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

Advertisement