நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
- நமது நிருபர் -
நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.
அதன் அறிக்கை: தமிழகத்தின் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் படி வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். இறந்தவரை விரைவாக அடையாளம் காணவும், அவரது குடும்பத்தினரை வலியுறுத்தி இருக்கிறோம். ரயில் நிலையப் பாதுகாப்பு, குறிப்பாக காலியாக உள்ள பெட்டிகளைக் கண்காணித்தல், இரவு நேர ரோந்துப் பணிகள், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும். ரயில்வே வளாகங்களிலும், பொதுப் போக்குவரத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, இதுபோன்ற கடுமையான சம்பவங்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும். இவ்வாறு தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
-
இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை
-
கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு