கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
- நமது நிருபர் -
இஸ்ரேலில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களை அக்கூட்டணி இழந்தது. இஸ்ரேல் அதிபர் புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் புதிய அரசை அமைக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார். அவர் தற்காலிகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
அவரது பதிவு: அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்கள் மனசாட்சியின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, ஒரு புதிய அரசை அமைக்க வேண்டுமா, அல்லது நெதன்யாகு இன்னும் இடைக்காலப் பிரதமராக இருக்கும்போதே இஸ்ரேல் அரசையும் அதன் குடிமக்களையும் மற்றொரு தேர்தலை சந்திக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். முடிவுகள் எளிமையானவை அல்ல.
ஆனால் அவை அவசியமானவை. நாம் செல்ல வேண்டிய பாதை, சரியான முடிவை எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும். இஸ்ரேலின் எதிர்காலம், நம்முடைய எதிர்காலம், நமது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவை இங்கு ஆபத்தில் உள்ளன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு நெதன்யாகுவின் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இவ்வாறு ஐசன்கோட் கூறியுள்ளார்.
மேலும்
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
-
இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை
-
கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு
-
ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி தாசில்தாரிடம் டவுன் பஞ்., மனு