பரமக்குடி, முதுகுளத்துார் ரயில்வே சப்வேயில் கசியும் கழிவுநீரால் பீதி

பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட முதுகுளத்துார் ரோட்டில் ரயில்வே சப்வே உள்ளது. இங்கு நாள் முழுவதும் கழிவுநீர் கசிவதால் பொதுமக்கள் நோய்தொற்று அச்சத்துடன் கடக்கின்றனர்.

பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து முதுகுளத்துார் செல்லும் வழியில் ரயில் வழித்தடம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் மேம்பாலம் மற்றும் சப்வே அமைக்கப்பட்டது. நகராட்சியின் 2 வார்டுகளுக்குட்பட்ட மக்கள் மற்றும் அருகில் உள்ள பரமக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் என தினமும் பல்லாயிரம் பேர் சப்வேயை கடந்து செல்கின்றனர். நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பல கி.மீ., கடந்து சப்வே பகுதியில் தேங்கும் நிலை உள்ளது. இதற்காக தொட்டி பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால் கழிவு நீரும் முறைப்படுத்தப்படாமல் இரு புறங்களிலும் செல்கிறது. சப்வே அருகில் சிமெண்ட் தளம் இல்லாததால் ஒட்டுமொத்தமாக மணலால் உறிஞ்சப்பட்டு கழிவு நீர் கசிந்து சப்வே பள்ளத்தில் நிரம்புகின்றன. இதுகுறித்து மக்கள் நகராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் கசவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement