சீனிவாசப் பெருமாள் கோவிலில் கார்த்திகை மகா திருமஞ்சனம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, காந்தி வீதியில் தென்கலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், 'ஸ்ரீ நரசிம்ம திரிநேத்ராதி அனுக்ரஹ' கார்த்திகை மாத வைபவம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகா திருமஞ்சனம் இன்று (நவ.,22) துவங்கியது.

கார்த்திகை மாதம் முழுதும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் 'திரிநேத்ராதி அனுக்ரஹம்' அருளுவதால், கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வாழ்வில் இருள் நீங்கி அருள் பெறவும், கல்வி மேன்மை, திருமணத் தடை நீக்கம், பிணிகள் மற்றும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு சுகமான வாழ்வு பெறவும் சிறப்பு மகா திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று நடந்த முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா திருமஞ்சனத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, வரும் 29, 6 மற்றும் 13ம் தேதி ஆகிய ஞாயிறுக்கிழமைகளில் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு மகா திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement