ஆற்றில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார கேடு
கடமலைக்குண்டு: துரைச்சாமிபுரம் அய்யனார் கோயில் வளாகத்தில் சேரும் குப்பையை மூலவைகை ஆற்றில் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.
க.விலக்கு -–கண்டமனூர் ரோட்டில் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் மூல வைகை ஆற்றின் கரையில் அய்யனார் கோயில் உள்ளது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோயில் வளாகத்தில் விசேஷ நிகழ்ச்சி நடத்துகின்றனர். விசேஷ நிகழ்ச்சிக்கு பின் சேரும் குப்பையை அப்புறப்படுத்தாமல் நேரடியாக மூல வைகை ஆற்றில் கொட்டுகின்றனர். அடிக்கடி கொட்டப்படும் குப்பையால் வனப்பகுதி சார்ந்துள்ள இந்த இடத்தில் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. மூல வைகை ஆறும் மாசடைகிறது. இது பற்றி நீர்வளத்துறை, வனத்துறை, ஊராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆற்றில் குப்பை கொட்ட தடை விதிக்கவும், துரைச்சாமிபுரம் ஊராட்சி நிர்வாகம் அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களே குப்பையை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.