விழிப்புணர்வு

ஊமச்சிகுளம்:

மதுரை மாவட்டத்தில் எஸ்.பி. தேவநாதன் உத்தரவுபடி போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆலாத்துாரில் ஏ. எஸ்.பி., தனு தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement