வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் இன்று (நவ.,22) வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பத்மஜா முன்னிலையில், முகாமை வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக கூடுதல் ஆணையர் மலர்விழி ஆய்வு செய்தார்.
தியாகதுருகம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் பணிகளை வாக்காளர்களின் சேவைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
அதேபோல் பொதுமக்கள் தங்களது பெயர்களை சேர்க்க, திருத்தம், நீக்கம் செய்ய https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். மேலும் வரும் 29 மற்றும் 5ம் தேதியும் முகாம் நடக்கிறது. முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள், ஓட்டுச்சாவடி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர், வாக்காளர் பட்டியல் சிறப்பு சருக்க முறை திருத்த பணிகளை அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஷ்ணுபிரியா மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அங்கீகரிக்கப்படாத முகப்பூச்சு க்ரீம்கள் விற்றால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது கேரள அரசு
-
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பிரசாரம்: தி.மு.க., இளைஞரணி தீர்மானம்
-
ஏழு ஆண்டுளாச்சு... தார் ரோடு வீணாச்சு...
-
பேண்டு வாத்திய போட்டி கல்வி அலுவலகத்தில் புகார்
-
இருநாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
-
மூடப்படாத மின் கேபிள் பள்ளங்களால் விபத்து அபாயம்