திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா முன்னேற்பாடுகள்; அமைச்சர் ரமேஷ் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, நவ.24ம் தேதி கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபத்திருநாளில் 8000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த முறை பரணி மற்றும் மஹா தீபம் தரிசனத்திற்கு 3000 பக்தர்களுக்கு ஆன்லைனில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அனுமதி சீட்டுக்கு கட்டணம் கிடையாது.

திருவிழாவுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் இன்று (நவ.22) நேரில் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள், கட்டுப்பாட்டு அறைகள், பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisement