இருநாள் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

புதுடில்லி: நேபாள பிரதமராக மார்ச் மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட பாலேந்திர ஷா, இரு நாள் அரசு முறை பயணமாக இன்று டில்லிக்கு வந்தார். அவரை மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிஷிர் நிதியமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே, பிரதமரின் தலைமை ஆலோசகர் குமார் பியாஞ்சங்கர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

நாளை (நவ.,23) பிரதமர் மோடியை, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாடுகளுக்கு இடையயான உறவு குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, போக்குவரத்து, எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் இலக்குகளை உள்ளடக்கிய கூட்டுத் தொலைநோக்கு திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. பாலேந்திர ஷாவின் இந்தப் பயணத்தின் போது, அதிகாரப்பூர்வமாக இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.

இப்பயணத்தின் போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்திக்கவுள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு, இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement