மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பிரசாரம்: தி.மு.க., இளைஞரணி தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நிர்வாகச் செயல்பாடுகளால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, தி.முக., இளைஞரணி சார்பில், பிரசாரம் மேற்கொள்ளவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில அமைப்பாளர் சிவா முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் 27ம் தேதி தி.மு.க., இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில இளைஞரணி சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

புதுச்சேரி அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, ஒவ்வொரு தொகுதி இளைஞரணி சார்பில், பிரசாரம் மேற்கொள்ளவது, மாநில மற்றும் தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கட்டாயம் கணக்குகள் துவங்கி சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement