ஏழு ஆண்டுளாச்சு... தார் ரோடு வீணாச்சு...

மேலுார்:

து.அம்பலகாரன்பட்டியில் தார் ரோடு பெயர்ந்து ஜல்லி கற்களாக மாறியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கிராமத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள நான்கு வழிச்சாலைக்கு செல்லும் தார் ரோடு 7 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது ரோடு பெயர்ந்து ஜல்லி கற்களாக மாறியதால் வயலில் விளைந்த பொருட்களையும், விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாமலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

அப்பகுதி பிரவீன் கூறியதாவது : டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். கற்கள் குத்தி டயர் பஞ்சராகிறது. ரோடு மோசமாக இருப்பதால் கிராமத்திற்குள் ஆம்புலன்ஸ் வர மறுக்கிறது. இதனால் நோயாளிகளை டூவீலரில் நான்கு வழிச்சாலைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். ரோடு அமைக்க அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என்றார்.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், புதிதாக ரோடு அமைக்க அளவீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அமைக்கப்படும் என்றனர்.

Advertisement