பஸ்கள் நிறுத்தம் வெளியேறும் மக்கள்

பழையனுார்: பழையனுார் அருகே வீரனேந்தல் வழியாக செல்லும் டவுன் பஸ்கள், மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பலரும் கிராமத்தை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.

வீரனேந்தல் ஊராட்சியில் வீரனேந்தல், கிடாக்குழி, அழகுடையான், குருந்தன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. வீரனேந்தலில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்ததால் வீரனேந்தல் ஊராட்சி என அழைக்கப்பட்டது. பழையனூர் , வீரனேந்தல் வழியாக டவுன் பஸ்கள், மினி பஸ்கள் உளுத்திமடை, எஸ்.வாகைகுளத்திற்கு தினசரி 4 முறை இயக்கப்பட்டன. நாளடைவில் வருவாய் இல்லை என கூறி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பழையனூரில் இறங்கி 4 கி.மீ.,நடந்து வருகின்றனர்.

பஸ்கள் இல்லாததால் கல்வி, கூலி வேலை, மருத்துவ வசதிக்கு சென்று வர முடியவில்லை என கூறி பலரும் பழையனூர், திருப்புவனத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். தற்போது 189 பேர் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் பாதி பேர் ஊரிலே யே இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்க மட்டுமே வந்து செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement