அரிவாளுடன் ரீல்ஸ்: போலீஸ் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மலையங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் 28. இவர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் ஜாதி பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டார். திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆறுமுகம், இனிமேல் ஆயுதங்களுடன் புகைப்படம், வீடியோ வெளியிட மாட்டேன் என உறுதியளித்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்த திருநெல்வேலி மாவட்ட போலீசார், நடிகர் வடிவேலு படத்துடன் 'தென்பாண்டி சீமையிலே' பாடலை இணைத்து ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோருக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement