நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்: கவனமாக இருக்க அறிவுறுத்தல்
உடுமலை: உடுமலை நகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையிலும், நகராட்சி பகுதிகளில், கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நகரில், 5 பேர் வரை, டெங்கு கொசு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில், சுகாதார பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடுமலை நகராட்சி கமிஷனர் குமரன் ஆய்வு மேற்கொண்டார்,வீட்டு உரிமையாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் அவர் கூறியதாவது :
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு, நன்னீரில் வளர்வதாகும். ஏடிஸ் வகை இக்கொசுக்கள், உடலில் வரி வரியாக இருக்கும்; பகல் நேரங்களில் மட்டும் கடிக்கும்.
டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க, வீடுகளில் தேவையற்ற பொருட்கள், ஆட்டு கல், அம்மிக்கல், டயர், பூந்தொட்டிகள், குளிர்சாதன பெட்டியின் பின் பகுதி உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதே போல், காய்ச்சல், சளி , இருமல் தொடர்ந்து இருந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, ஆய்வு செய்து, தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை அகற்றி, வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உடுமலை நகராட்சியில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும்என, தெரிவித்தார்.
கமிஷனருடன், நகர் நல அலுவலர் டாக்டர் அமுதவல்லி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ராஜ்மோகன், செல்வகுமார், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
பாதாள சாக்கடை மேன்ேஹாலில் கழிவுநீர் வெளியேறுவதால் அவதி
-
பணி ஓய்வு பாராட்டு விழா
-
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
-
ஏமாற்றும் வடகிழக்கு பருவமழை நீர்வளத்துறை ஏரிகளில் கடும் வறட்சி
-
வட்டி தள்ளுபடி அரசாணை வெளியாவதில் தாமதம் வீட்டுவசதி சங்கங்களில் வசூல் பணி முடக்கம்
-
ரயிலில் வன்கொடுமை செய்து பெண் கொலை 7 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு