வீடுதோறும் ஜொலிக்கிறது திருக்கார்த்திகை தீபம்
கோவை: கார்த்திகை தீபம் என்றாலே நம் எல்லோருக்குமே ஒரு தனி மகிழ்ச்சிதான். மற்ற நாட்களில் நம் வீடு அழகாக இருந்தாலும், கார்த்திகை தீபத் திருநாளன்று வீடு முழுவதும் ஏற்றப்படும் விளக்குகள், நம் வீட்டுக்கு கூடுதல் அழகையே கொடுத்துவிடும்.
வாசல் முதல் மாடி வரை வரிசையாக ஏற்றப்படும் தீபங்களைப் பார்க்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே மனதில் ஒரு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். அந்த மூன்று நாட்களும் விளக்குகளின் ஒளியில் வீடே புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும். ஒளியைப் பரப்பும் இந்தத் தீபங்கள், நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
கார்த்திகை தீபத் திருநாளை வரவேற்க, வீடுகள் தோறும் விளக்குகள் வாங்கும் ஆர்வம் தொடங்கிவிட்டது. கடைகளிலும் வழக்கமான அகல் விளக்குகளைத் தாண்டி, மயில் தோகையில் முருகப்பெருமான் அமர்ந்திருப்பது போன்ற விளக்கு, லட்சுமி, விநாயகர் சுற்றிலும் தீபங்கள் என, விதவிதமான வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒவ்வொன்றும் பார்க்க அழகாகவும், வீட்டை அலங்கரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
மேலும்
-
பாதாள சாக்கடை மேன்ேஹாலில் கழிவுநீர் வெளியேறுவதால் அவதி
-
பணி ஓய்வு பாராட்டு விழா
-
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
-
ஏமாற்றும் வடகிழக்கு பருவமழை நீர்வளத்துறை ஏரிகளில் கடும் வறட்சி
-
வட்டி தள்ளுபடி அரசாணை வெளியாவதில் தாமதம் வீட்டுவசதி சங்கங்களில் வசூல் பணி முடக்கம்
-
ரயிலில் வன்கொடுமை செய்து பெண் கொலை 7 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு