பிரதமர் மோடி லட்சக்கணக்கானோரை கடனில் இருந்து காப்பாற்றினார்: வர்த்தக அமைப்பு நன்றி

லக்னோவில் நடந்தநிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில்,''தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டு கொண்டேன். எனது வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொண்டதால் தங்கம் விலை குறைந்தது,'' என்றார். தற்போது தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை( சிஐடி) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.

அக்கடிதத்தில் சிஐடி தலைவர் பிரிஜேஷ் கோயல், பொதுச்செயலாளர்கள் ரமேஷ் அஹூஜா, குர்மீத் அரோரா, துணைத்தலைவர் தீபக் கார்க், பொருளாளர் சுரேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு போட்டுள்ளனர்.




அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உங்களின் தொலைநோக்கு பார்வையால், லட்சக்கணக்கான நகை வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் கடனில் வீழ்வதில் இருந்து தப்பினர். உங்கள் ஆலோசனையை புறக்கணித்து அந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், இன்று அவர்களுக்கு கிலோவுக்கு 65 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். லட்சக்கணக்கான நகை வியாபாரிகள் கடனில் மூழ்கி திவாலாகி இருப்பார்கள்.

பிரதமர் மோடி எங்களை காப்பாற்றி விட்டார் என்று எங்களுக்கு தொடர்ந்து செய்தி வருகின்றன. பிரதமர் தெரிவித்த ஆலோசனையை அன்று எதிர்த்த அதே வியாபாரிகளும், வர்த்தகர்களும் இன்று பிரதமர் மோடி கூறியது சரி தான் என இப்போது ஒப்புக்கொள்கின்றனர்.

பிரதமர் , நீங்கள் வெறும் அறிவுரை மட்டும் வழங்கவில்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பால் சம்பாதித்த மூலதனத்தை காப்பாற்றி உள்ளீர்கள். சிடி மற்றும் வர்த்தக சமூகம் சா்ரபாக உங்களுக்கு eனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

Advertisement