தாவரவியல் பூங்கா சாலையில் ஆக்கிரமிப்பு: சுற்றுலா பயணியர் அவதி

ஊட்டி: பூங்கா நடைபாதையில் ஆக்கிரமித்து வியாபாரம் செய்யப்பட்டு வருவதால் சுற்றுலா பயணியர் சாலையில் நடக்க வேண்டிய நிலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் பல்வேறு பகுதிகளில் பல வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. தவிர , மாடங்களில் பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட மலர்களை காண வார நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர் எவ்வித இடையூறின்றி வந்து செல்லும் வகையில் நடைபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் பொருட்களை தொங்க விட்டுள்ளனர். நடைபாதையில் நடக்க முடியாமல் சுற்றுலா பயணியர் சாலையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்,போலீசார் ஆய்வு மேற்கொண்டு பாரபட்சம் பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என , வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement