வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கிய நபர் சிக்கினார்

ஆலங்காயம்: திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அருகே, வீட்டில் கள்ள நாட்டு துப்பாக்கி பதுக்கிய வெங்கடேசன், 38, என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்காயம் போலீசார், நிம்மியம்பட்டு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெங்கடேசன் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில், கள்ள நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வெங்கடசேனை கைது செய்தனர்.

Advertisement