பெண் பக்தர்கள் மட்டுமே இழுத்த சென்ற அம்மன் தேர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீப திருவிழா பஞ்ச மூர்த்திகள் தேரோட்டத்தில், பராசக்தி அம்மன் தேரை, பெண் பக்தர்கள் மட்டுமே, வடம் பிடித்து, விடிய விடிய இழுத்து சென்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் தனித்தனி தேரில் அலங்கரிக்கப்பட்டு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், பராசக்தி அம்மன் தேரை, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பல ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டும், இரு புறமும் சங்கிலியால் ஆன வடத்தை பிடித்து, விடிய விடிய இழுத்து சென்று வழிபட்டனர்.

நேற்று அதிகாலை, 4:00 மணி அளவில் பராசக்தி அம்மன் தேர், நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் வீதி உலா வந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement