விபூதி பூசி பணம் பறிக்கும் கும்பல் போதையில் தாக்கி கொண்டு இடையூறு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவை காண நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம், கிரிவலப்பாதை, திருமஞ்சன கோபுர தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, சன்னதி தெரு, சின்னகடை தெரு மற்றும் மாட வீதி பகுதிகளில், பகுதிகளில் கைகளில் விபூதி தட்டு வைத்த கொண்டு பக்தர்களுக்கு விபூதி பூசி பணம் பறிக்கும் போலி சாமியார்கள், போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அதிக சத்தத்துடன் தள்ளாடியபடி பக்தர்கள் செல்லும் சாலையின் நடுவில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டதால், அந்த வழியாக சென்ற பக்தர்கள் அலறியடித்தபடி விலகி சென்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிவல பக்தர்களிடம் பணம் பறிக்கும் கும்பல், பக்தர்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக போலீஸ் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் அறிவித்துள்ளனர்.

ஆனால் வெறும் அறிவிப்பாக மட்டமே உள்ளது. மேலும், போதை கும்பல் சாலையில் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக நின்று சண்டை போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதை காரில் சென்ற சில போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து செல்வது வேதனை அளிக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பில் போலீசார் கவனம் செலுத்தி கிரிவலப்பாதையில் முகாமிட்டுள் பல ஆயிரக்கணக்கான போதை கும்பல் ஆசாமிகளை அப்புற படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Advertisement