நகராட்சி நிர்வாகத்துறையில் பணியிட மாற்றத்துக்கு நிபந்தனைகள் விதிப்பு
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில், அலுவலர்கள், அதிகாரிகள் பணியிடமாற்றத்திற்கு, அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை:
நகராட்சி நிர்வாக துறையில் பணியிட மாற்றங்கள், இனி ஏப்.,1 முதல், மே 31 வரை மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 1 முதல், 31ம் தேதி வரை மட்டுமே பெறப்படும்.
ஜூன் 1ம்தேதி முதல், மார்ச் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், புகார், இடமாற்றத் தின் வாயிலாக பதவி உயர்வு, நீண்டகால விடுப் புக்கு பின் மீண்டும் பணியமர்த்துதல், பதவி இறக்கம், இடைநீக்கம் ரத்து போன்ற காரணங்களுக்காக மட்டுமே பணியிடமாற்ற உத்தரவு வழங்கப்படும்.
ஏற்கனவே மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த இடத்தில் இருந்து, காலி பணியிடத்திற்கு அலுவலர்கள் மாற்றப்படுவர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பதவி உயர்வு பெறுவோருக்கு, பணிபுரியும் உள்ளாட்சி தவிர்த்து, மற்றொரு உள்ளாட்சியில் பணி வழங்கப்படும்.
இடமாற்றத்திற்கு விண்ணப் பிப்போர், தற்போ துள்ள பணியில் குறைந்தபட்சம், ஓராண்டு கட்டாயம் பணியாற்றி இருக்க வேண்டும்.
ஒரு முறை ஒருவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க, அவர் தகுதி பெறமாட்டார். மூன்று ஆண்டுகள் ஒரு இடத்தில் பணிபுரிந்தவர், ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு குறைவாக இருந்தால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை.
வாழ்க்கை துணை பணிபுரியும் இடத்திற்கு, இடமாற்றம் கேட்டால், தற்போதுள்ள இடத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றி இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதேபோல, 40 சதவீத மாற்றுத் திறனாளிகள், சீறுநீரகம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய், மூளைகட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒராண்டு பணி நிபந்தனையில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தீபத்துாண் விஷயத்தில் தி.மு.க., பாணியில் த.வெ.க., அரசும் செயல்படுகிறது: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை
-
வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி
-
கார்த்திகை முதல் பிரதோஷம் சிவாலயங்களில் தீப வழிபாடு
-
மருமகளை தாக்கிய மாமனார் மீது வழக்கு
-
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
-
100 அடி கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை மீட்ட பயர்போர்ஸ்