பூட்டு சாவி தொழிலாளர் சங்கத்தை நலவாரியத்தில் இணைக்க கோரிக்கை
திண்டுக்கல்:
‘‘தமிழக பூட்டு சாவி தொழிலாளர்கள் நல சங்கத்தை, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தோடு இணைக்க வேண்டும்.’’ என, சங்கத் தலைவர் சையது அஷ்ரப் உசேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் தமிழக பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சையது அஷ்ரப் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாரம்பரியமாக பூட்டு சாவி தொழிலை நம்பி தொழில் செய்து வருகிறோம். இந்த தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க, சங்கத்தை அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.பி.,சச்சிதானந்தத்திடம் மனு அளித்துள்ளோம். ரோட்டோரங்களில் பூட்டு சாவி பழுது பார்க்கும் கடைகளை நடத்துபவர்களுக்கு, அரசு சார்பில் ஒதுக்கப்படும் கடைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் உரிய அடையாள ஆவணங்களை பெற்று வேலை செய்தாலும், திருட்டு சம்பவங்களில் தவறு செய்பவர்களுடன் சேர்த்து பூட்டு சாவி தொழிலாளர்களையும் வழக்குகளில் சிக்க வைக்கும் நிலை உள்ளது. இதை தவிர்த்து எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு, வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை முறையாகப் பராமரிப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்டோமொபைல், நவீன பூட்டு, சாவி தொழில் நுட்பத்தில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்குச் சங்கம் சார்பில் இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது., என்றார்.
மேலும்
-
தீபத்துாண் விஷயத்தில் தி.மு.க., பாணியில் த.வெ.க., அரசும் செயல்படுகிறது: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை
-
வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி
-
கார்த்திகை முதல் பிரதோஷம் சிவாலயங்களில் தீப வழிபாடு
-
மருமகளை தாக்கிய மாமனார் மீது வழக்கு
-
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
-
100 அடி கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை மீட்ட பயர்போர்ஸ்