‘மகளை கோவிலில் விடுங்கள்’ செஞ்சி சிறுமியின் தாய் உருக்கம்
செஞ்சி: ‘எனது மகளை கடத்தியிருந்தால், கோவிலில் விட்டு விடுங்கள்’ என, செஞ்சி அருகே மாயமான சிறுமியின் தாய் பவானி, உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல் – பவானி தம்பதி. இவர்களின், 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்., 12ல் மாயமானார். சி.பி.சி.ஐ.டி., போலீசார், விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பவானி கண்ணீர் மல்க கூறியதாவது:
என் மகள் ஹேமலதா மாயமாகி இன்றுடன், 42 நாட்களாகி விட்டது. மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம். என் மகளை யாராவது கடத்தியிருந்தால், அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு வேண்டி கொள்கிறேன். என் மகளை, என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விடுங்கள். நேரடியாகக் கொடுக்க முடியாவிட்டால், ஏதாவது ஒரு கோவிலில் கொண்டு வந்து விட்டு செல்லுங்கள். அங்குள்ளவர்கள் என் மகளை, எங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
தீபத்துாண் விஷயத்தில் தி.மு.க., பாணியில் த.வெ.க., அரசும் செயல்படுகிறது: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை
-
வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி
-
கார்த்திகை முதல் பிரதோஷம் சிவாலயங்களில் தீப வழிபாடு
-
மருமகளை தாக்கிய மாமனார் மீது வழக்கு
-
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
-
100 அடி கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை மீட்ட பயர்போர்ஸ்