அண்ணியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய வாலிபர் கைது
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப பிரச்னையில் அண்ணியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ராமராஜ் 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர் உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி 45, இவரது மனைவி சண்முகசூர்யா 35. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து முனியசாமியின் சகோதரர் ராமராஜ், நேற்று (நவ.,21) சண்முகசூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த ராம்ராஜ், சண்முகசூர்யாவை சுவற்றில் மோதவைத்து தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த சண்முகசூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைமறைத்து அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு ராமராஜ் தகவல் கொடுத்தார். பேரையூர் போலீசார் சண்முகசூர்யா உடலை நேரில் பார்த்தபோது தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. விசாரணையின் போது ராம்ராஜ் கொலை செய்ததை அறிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
மேலும்
-
தீபத்துாண் விஷயத்தில் தி.மு.க., பாணியில் த.வெ.க., அரசும் செயல்படுகிறது: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை
-
வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி
-
கார்த்திகை முதல் பிரதோஷம் சிவாலயங்களில் தீப வழிபாடு
-
மருமகளை தாக்கிய மாமனார் மீது வழக்கு
-
ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
-
100 அடி கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை மீட்ட பயர்போர்ஸ்