100 அடி கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை மீட்ட பயர்போர்ஸ்

அன்னூர்:

அன்னுார் குப்பனூரை சேர்ந்த கானப்பர் மகன் சுரேஷ், 52; விவசாயி. அப்பகுதியில் 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதாகி இருந்தது.

அதை மேலே கொண்டு வர, சுரேஷ் இன்று (நவ.,22) மதியம் கிணற்றுக்குள் இறங்கியபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் டேனியல் கந்தசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் உதவியோடு கிணற்றில் இறங்கினர்.

ஒன்றரை மணி நேரம் போராடி, கயிற்றில் சுரேஷை கட்டி காயமின்றி மேலே கொண்டு வந்தனர். சாதித்த தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement