கொசு ஒழிப்பு பணிகள் மாநகராட்சியில் தீவிரம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகளில் புதர்களை அகற்றவும், தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு ஒழிப்புப் புகை மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அம்மாபாளையம், கஸ்துாரி வீதி, எஸ்.என்.ஜி. நகர் 2-வது வீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் முத்துக்குமரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement