ஹிந்து முன்னணியின் ஹிந்து சங்கமம் நிகழ்ச்சி
பழநி:
பழநியில் ஹிந்து முன்னணி சார்பில், ‘ஹிந்து சங்கமம்’ நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழநி நகர ஊழியர் கூட்டம் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், செந்தில்குமார், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெகன், மதுரை கோட்டச் செயலாளர் பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்தாண்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை என்பது பத்தர்களுக்காக செயல்பட வேண்டியது. தமிழக அரசு, ஹிந்து சமய அறநிலைத்துறையை தவறாக பயன்படுத்துகிறது. பக்தர்கள் வழங்கிய பணத்தில் விமான பயணம், வக்கீல் கட்டணம் என, வீணாக செலவு செய்து, இந்த அரசும் அறநிலையத்துறையும் பக்தர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது., என்றார்.
மேலும்
-
புரசைவாக்கத்தில் அழுகிய நிலையில் மூத்த தம்பதியின் உடல்கள் மீட்பு
-
தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால் 70 சதவீத பிரச்னைகளை தீர்க்க முடியும் அன்புமணி நம்பிக்கை
-
திருக்கச்சூரில் கார்த்திகை தீபம் ஏற்றும் பணி தீவிரம்
-
போலீஸ் ஸ்டேஷன் நுாலகத்திற்கு மாஜிஸ்திரேட் புத்தகம் வழங்கல்
-
காட்டு பன்றிகளால் சேதமாகும் பயிர்கள்
-
வாக்காளர் பட்டியல் திருத்த 13,600 பேர் விண்ணப்பம்