பி.ஏ.பி. 2வது மண்டல பாசனம் கடைமடை வந்த தண்ணீர்

திருப்பூர்: பி.ஏ.பி. திட்டத்தின் கீழ், திருமூர்த்தி மலையில் இருந்து இரண்டாவது மண்டலத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, 60 நாட்களுக்கு 3,500 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இடைவெளிவிட்டு சுற்று முறையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பிரதான கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர், பகிர்மான மற்றும் கிளைக் கால்வாய்கள் வழியாக விவசாய நிலங்களைச் சென்றடைகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருந்தொழுவு வாய்க்காலிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

பி.ஏ.பி., விவசாயிகள் கூறுகையில், “இரண்டாவது மண்டலத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று கொண்டிருக்கிறது. வாய்க்கால் முன்கூட்டியே சுத்தம் செய்யப்பட்டிருந்ததால், தண்ணீர் சீராகப் பாய்கிறது. முன்பு 25 நாட்களில் கடைமடைக்குத் தண்ணீர் கிடைத்துவிடும். தற்போது 60 முதல் 70 நாட்கள் வரை ஆகிறது,” என்றனர்.

பெருந்தொழுவு பி.ஏ.பி. வாய்க்காலுக்கு தண்ணீர் வந்தது.

Advertisement