மருமகளை தாக்கிய மாமனார் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மருமகளைத் தாக்கிய மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கா.மாமனந்தல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் மனைவி கீதா, 60; இன்று (நவ.,22) காலை 7:30 மணியளவில் குமார் நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற போது, கீதா தலையில் பலத்த காயத்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

விசாரித்ததில் மாமனார் சாமிநாதன் கிரிக்கெட் ஸ்டம்பால் கீதாவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரிந்தது. இதையடுத்து, கீதா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சாமிநாதன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement