வேளாண் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண் தொழில் நுட்ப கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் பார்கவி, மணிஷா, நிவேதா, மோனிகா, கீர்த்தனா, மாளவிகா, மதிவதனி, நயனா, பவித்ராதேவி ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக வடமதுரை பி.கொசவபட்டியில் விவசாயி ஓம்பிரகாஷின் இயற்கை விவசாய பண்ணைக்கு சென்றனர். அங்கு ‘இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், மண் வளத்தை மேம்படுத்தும் முறைகள் குறித்தும், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை இயற்கையான முறையில் வழங்க செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்கும் முறை குறித்தும் மாணவிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement