பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி
பெ.நா.பாளையம்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தந் லூகர்,24. தனியார் தொழிற்சாலையில் பவுண்டரியில் ஹெல்பராக பணியாற்றி வந்தவர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் கணபதி கார்டன் பகுதியில் வசித்தவர் கடந்த, 17ம் தேதி இரவு, 2:00 மணிக்கு இவரது வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சித்தந் லூகரை கடித்தது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று (நவ.,21) மாலை உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement