ரூ.2 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
திருச்சி: துபாயிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த சையத் நஜீல்கான், 23, என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்திற்கு, துபாயிலிருந்து இன்று (நவ.,22) காலை வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான பயணியரை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகிக்கும்படி வந்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்ததில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.33 கிலோ தங்கத்தை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது.
தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த சையத் நஜீல்கான் என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாமக்கல் ‘மாஜி’ எம்.எல்.ஏ., மீது ரூ.84 லட்சம் மோசடி புகார்
-
ஆன்லைன் பதிவு அதிகம் காற்றாடிய முகாம்கள்
-
ஒவ்வொரு இந்தியருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் மோடி அரசு; அமித் ஷா
-
வங்க தேசத்தில் தொடரும் வன்முறை; ஷேக் ஹசீனா கட்சியினரின் வீடுகளுக்கு தீவைப்பு
-
ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் டிச., 16ல் கையெழுத்தாகும்
-
நயினார் குளத்தில் படகு சவாரி கழிவுநீர் கலப்பதால் எதிர்ப்பு
Advertisement
Advertisement