வறட்சி நிவாரணம் வழங்க தி.மு.க., உதயநிதி வலியுறுத்தல்

சென்னை: ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகுவதால், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

முதல்வர் விஜயின் விளம்பர வெறியால், காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன. எனவே, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும். கடந்த ஜூன் 12ம் தேதி, ஆட்சியாளர்கள் அணையை திறக்காததால், குறுவை சாகுபடி பொய்த்தது. சம்பா சாகுபடிக்காவது, சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகளும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினோம். ஆனால், அதை கேட்காமல், முதல்வர் விஜய் ‘ரீல்ஸ்’ வெறியோடு, முன்கூட்டியே செப்.,1ம் தேதி தண்ணீர் திறந்து விட்டதால், இப்போது தண்ணீரின்றி, டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, செவிமடுக்கவோ கூடாது எனும், ஆட்சியாளர்களின் வெட்டி ‘ஈகோ’வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கின்றனர். ஏற்கனவே, முழு பயிர்க்கடன் தள்ளுபடி என சொல்லி, விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர் சேதம் குறித்து, வெளிப்படையான கள ஆய்வை, அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement