குடிநீர் குழாய் கசிவுகளை சரி செய்யும் வேலை தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் -– அன்னூர் சாலையில் திருப்பூர் 2-வது குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் தேங்கி வீணாகி வந்தது. 35 ஆண்டுகள் பழமையான இந்த பைப் லைன்களில் அடுத்தடுத்து கசிவு ஏற்படுவதால், சாலையில் தண்ணீர் தேங்கி, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் 6 இடங்களில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை சரி செய்யும் வேலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement