பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமருக்கு சத்ய சாய் பள்ளி மாணவர்கள் வரவேற்பு

மதுரை: நவ.16ம் தேதி பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சத்ய சாய் பள்ளி மாணவர்கள், வேத மந்திரங்களை ஓதி பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நவ.16ல் பிலிப்பைன்ஸ் சென்றார். மணிலா விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிலிள்ளா நகரில் செயல்படும் சத்ய சாய் பள்ளி மாணவர்கள், அங்கு திரண்டிருந்தனர். வேத மந்திரங்களை ஓதியும், பாடல்களைப் பாடியும் பிரதமர் மோடிக்கு அவர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, புலம்பெயர்ந்த இந்திய மாணவர்கள் நமது கலாசாரத்தைப் பாதுகாப்பதை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் பூர்ண கும்ப ஸ்லோகத்தை ஓதுவதை கண்டது சிறப்பாக இருந்தது.

அன்பான வரவேற்பை அளித்த இந்திய வம்சாவளியினரை கண்டதில் மகிழ்ச்சி, என தெரிவித்திருந்தார்.

Advertisement