அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
வில்சன் கார்டன்: பி. எம்.டி.சி., பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில், 4 கோடி ரூபாய் ஊழல் செய்த அதிகாரிகள், ஊழியர்கள் என, 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர போக்குவரத்து அமைப்பின் உயிர்நாடியாக, பி.எம்.டி.சி., பஸ் சேவை உள்ளது. நகரில், தினமும் 6,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் அடிக்கடி சாலையில் பழுதடைந்து நின்று விடுகின்றன. தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால் பஸ்கள் நின்று விடுவதாக டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பி.எம்.டி.சி., பஸ்களுக்கு சரியான நேரத்தில், தேவையான உபகரணங்கள் விநியோகம் செய்ததாக கூறி, போலி ஆவணங்கள் மூலம், 4 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக, பி.எம்.டி.சி., பாதுகாப்பு துறை அதிகாரி பரிமளா நாயக், வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில், கடந்த மாதம் புகார் அளித்தார்.
இந்த புகாரின்படி, சாந்திநகரில் உள்ள பி.எம்.டி.சி., பணிமனை அதிகாரிகள் நாகராஜ், அசோக், ஷில்பா, விஸ்வநாத், பந்தனுார்கர், மன்மதன், சாயா, ரூபா, அனிதா உள்ளிட்ட 21 பேர் மீது, நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் 21 பேரும், கடந்த 2021 முதல், தற்போது வரை பி.எம்.டி.சி., பஸ்களுக்கு, 2,280 உதிரிபாகங்கள் வழங்கியதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அரசிடம் இருந்து அதற்கான பணத்தை பெற்றுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிந்துள்ளது.
மேலும்
-
சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
-
கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
-
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
-
அதிமுக தொண்டனான என் பேச்சை கேளுங்களேன்!: பழனிசாமிக்கு வேலுமணி மீண்டும் பதில்