நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
நவக்கரை: நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே. கல்லூரியில், ஏ.ஜே.கே. கல்லூரி, தினமலர் மற்றும் மலையாள மனோரமா சார்பில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு திருவிழா நடந்து வருகிறது.
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், பாலக்காடு ஏ.வி.எம்.மேல்நிலை பள்ளி அணி, பால் மரீனா அணியை வென்று முதலிடம் பிடித்தது
எட்டிமடை அம்ரித வித்யாலயம் அணி, கடம்பூர் அரசு பள்ளி அணியை வென்று மூன்றாமிடம் பிடித்தது.
முதலிடம் பிடித்த அணிக்கு கேடயம், ரொக்கம், 10 ஆயிரம், இரண்டாமிடத்திற்கு கேடயம், ரொக்கம் ஏழாயிரம், மூன்றாமிடத்திற்கு கேடயம், ரொக்கம் மூன்றாயிரத்து, 500 மற்றும் நான்காமிடத்திற்கு கேடயம், ரொக்கம் இரண்டாயிரத்து, 500 ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது. மலையாள மனோரமாவின் சர்க்குலேஷன் பிரிவை சேர்ந்த சிதீஷ், ஏ.ஜே.கே. கல்லூரி முதல்வர் ராஜூ ஆகியோர் பரிசு வழங்கினர்.
தொடர்ந்து நடந்த பெண்களுக்கான கைப்பந்து போட்டியின், முதல் ஆட்டத்தில் பரமத்தி, மலர் மெட்ரிக் பள்ளி, நடுவட்டம் ஜி.ஜெ. பள்ளியை வென்றது. இரண்டாம் ஆட்டத்தில், காரமடை, எஸ்.வி.ஜி.வி. பள்ளி, கொல்லங்கோடு, பி.எஸ்.எஸ். பள்ளியை வென்றது.
மூன்றாம் ஆட்டத்தில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி, பொட்டச்சேரி அரசு பள்ளி அணியை வென்றது. நான்காம் ஆட்டத்தில், ஒட்டன்சத்திரம் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.
ஐந்தாம் ஆட்டத்தில், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி, ஆத்தூர் பாரதியார் பள்ளி அணியை வென்றது.
ஆறாம் ஆட்டத்தில், ஒத்தப்பாலம் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி வென்றது. ஏழாம் ஆட்டத்தில், பி.எஸ் ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி, பாலமதி மலர் மெட்ரிக் பள்ளியை தோற்கடித்தது. எட்டாம் ஆட்டத்தில் காரமடை, எஸ்.வி.ஜி.வி. பள்ளி, ஒட்டன்சத்திரம், வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வென்றது.
ஒன்பதாம் ஆட்டத்தில் ஒட்டன்சத்திரம் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளியை , 25 –- 22, 25 –- 20 என்ற நேர் செட்களில் வென்றது.
இறுதிப் போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி, காரமடை, எஸ்.வி.ஜி.பள்ளியை, 25 –13, 25 -– 15 என்ற நேர் செட்களில் வென்றது.