கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
பெங்களூரு: ‘மலை நாடுகள், கடலோர பகுதிகள், பெங்களூரு, பழைய மைசூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல், 28ம் தேதி வரை மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாலும், பருவ காற்று மாற்றங்களாலும் பெங்களூரு உட்பட கர்நாடகாவில், இன்று முதல் 28ம் தேதி வரை, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்டை வானிலை காணப்படும்.
இன்று, கோலார், பெங்களூரு தெற்கு, சாம்ராஜ் நகர், பெங்களூரு கிராமம், பெங்களூரு நகரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பல்லாரி சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தாவணகெரே, மாண்டியா, மைசூரு, ஷிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, விஜயநகர், பாகல்கோட், பெலகாவி, பீதர், தார்வாட், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
நவ., 24ல் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், பெங்களூரு lகரம், கோலார், பெங்களூரு தெற்கு, சாம்ராஜ் நகர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் லேசா மழை அல்லது இடியுடன் கூடிய பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே வேளையில் உத்தர கன்னடா மாவட்டத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பல்லாரி, சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தாவணகெரே, மாண்டியா, மைசூரு, ஷிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, விஜயநகரா மாவட்டங்களில் வறண்டை வானிலை காணப்படும். பாகல்கோட், பெலகாவி, பீதர், தார்வாட், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிரில் வெயிலின் தாக்கம் இருக்கும்.
நவ., 25ல் சிக்கமகளூரு, மாண்டியா, மைசூரு, ஹாசன், குடகு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது இடியுடுன் கூடிய மழை பெய்யும்.
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும், உத்தர கன்னடாவில் வறண்டை வானிலை காணப்படும்.
இது போல, நவ., 28ம் தேதி வரை லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும்
-
சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
-
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
-
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
-
அதிமுக தொண்டனான என் பேச்சை கேளுங்களேன்!: பழனிசாமிக்கு வேலுமணி மீண்டும் பதில்