தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள தரைப்பாலம் நடுவில் போடப்பட்ட இரும்பு வலைகள் வளைந்து போனதால் வாகனங்கள் தொடர் விபத்திற்குள்ளாகின்றன.
அருப்புக்கோட்டையில் புதுக்கடை பஜார், எஸ்.பி.கே., பள்ளி ரோடு, பழைய தேவாங்கர் கல்லூரி ரோடு சந்திக்கும் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
பாலத்தின் கீழ்ப்பகுதியில் மழை நீர்வரத்து ஓடை செல்வதால், மழைக்காலத்தில் ஓடையில் வரும் குப்பையை அகற்றுவதற்கு பாலத்தின் நடுவே இடைவெளி விடப்பட்டது. இதற்கு இரும்பிலான கம்பி வலை அமைக்கப்பட்டது.
சில மாதங்களிலேயே கம்பி வலை வளைந்து போனதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்களில் செல்பவர்கள் இரவு நேரங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. பாலத்தில் உறுதியான கம்பி வலை அல்லது கான்கிரீட் மூடி கொண்டு மூட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
-
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
-
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
-
அதிமுக தொண்டனான என் பேச்சை கேளுங்களேன்!: பழனிசாமிக்கு வேலுமணி மீண்டும் பதில்