சாலையில் கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
நெல்லிக்குப்பம்.: நெல்லிக்கப்பத்தில், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சென்னை – கன்னியாகுமரி தொழில்தட சாலை விரிவாக்க திட்டத்தில், கடலூர்–மடப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் நெல்லிக்குப்பம் நகரில் சாலை விரிவாக்கத்தின் போது, சாலையின் இருபுறமும் மூன்றடி ஆழத்துக்கு கழிவு நீர் கால்வாய் கட்டி, மேலே சிமெண்ட் சிலாப் போட்டு மூடினர்.
இந்த கழிவுநீர் கால்வாய் முறையாக கட்டாததால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. கீழ்பட்டாம்பாக்கம் ஸ்டேட் பாங்க் அருகில் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி செல்ல வழி இல்லாததால் கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வங்கிக்கு வருபவர்களும் அருகில் வசிப்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது அது எங்களது வேலை இல்லை. நெடுஞ்சாலைத் துறையினர் தான் சரி செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால் நெடுஞ்சாலை துறையினரும் கண்டு கொள்ளமால் உள்ளனர். இதனால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
உடனடியாக கழிவுநீர் செல்ல முறையாக வழி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் பள்ளிகளுக்கிடையே விளையாட்டு போட்டி
-
தரைப்பாலத்தில் வளைந்த இரும்பு வலை
-
கர்நாடகாவில் இன்று முதல் நவ., 28 வரை மழைக்கு வாய்ப்பு
-
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை: அடாவடி செய்தால் சிறை தான் என எச்சரிக்கை
-
அரசு பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ரூ.4 கோடி ஊழல்
-
அதிமுக தொண்டனான என் பேச்சை கேளுங்களேன்!: பழனிசாமிக்கு வேலுமணி மீண்டும் பதில்