ராஜகணபதி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ராஜ கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜை நடந்தன. வேத மந்திரங்கள் முழங்க, புனித கலசங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் படப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில்
நிர்வாகத்தினர் மற்றும் படப்பள்ளி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement